ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக்: தமிழில் மட்டும் தோல்வி அடைந்த பாண்டவர்கள் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள் | கைதி 2 படத்தில் இடம்பெறும் விக்ரம் படத்தின் 3 எல்சியு கேரக்டர்கள் | அஜித்துக்கு ஜோடியாகும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி |
சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் லவ் ஸ்டோரி மற்றும் விராட பர்வம் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் லவ் ஸ்டோரி படம் வரும் ஏப்-16ஆம் தேதி ரிலீசாகிறது. நாகசைதன்யா, சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை, சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.. தற்போது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் நாகசைதன்யாவும், சாய்பல்லவியும்.
புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக நடிகர் ராணா, சின்னத்திரையில் நடத்தி வரும் யாரி நம்பர் 1 நிகழ்ச்சியில் நாகசைதன்யா சாய் பல்லவியுடன் இயக்குனர் சேகர் கம்முலாவும் கலந்துகொண்டார். ஏற்கனவே ராணாவுடன் விராட பர்வம் படத்தில் சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளதால், அவரிடம் கலகலப்பான கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினாராம் ராணா. இவர்கள் இணைந்து நடித்துள்ள விராட பர்வம் படம் வரும் ஏப்-30ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.