நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் |
ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் நாளை மே 20-ந்தேதி அவரது 38ஆவது பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர். அதில், என் அன்பான ரசிகர்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது பெரிய நன்றி. உங்கள் செய்திகளையும், வீடியோக்களையும், வாழ்த்துக்களையும் நான் பார்த்திருக்கிறேன். உங்கள் பிரார்த்தனைகள் என்னை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அன்பிற்காக உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளின்போது நீங்கள் காட்டும் பாசம் உண்மையிலேயே நான் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனபோதிலும் இந்த சவாலான காலகட்டத்தில் நீங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பது தான் எனக்கு கொடுக்கும் மிகப் பெரிய பரிசு. தற்போது நாடு கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் என அனைவருமே தன்னலமற்ற இந்த போரை அயராவது நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்புக்குரியவர்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். அதனால் இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. நமது ஒற்றுமையை காண்பிப்பதற்கான நேரம்.
தயவு செய்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள். கொரோனா வைரஸிற்கு எதிரான போர் முடிந்ததும் நாம் அனைவரும் ஒன்றாக கூடுவோம். கொண்டாடி மகிழ்வோம், ஜெய்ஹிந்த். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர்.