ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! |

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, நாக சைதன்யா பிரிவு விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டதும் ஐதராபாத்திலேயே கணவருடன் தனி வீட்டில் குடியேறினார். ஆனால், அந்த வீட்டை விட்டு சில மாதங்களுக்கு முன்பாகவே நாக சைதன்யா வெளியே போய்விட்டார் என்றார்கள். இருந்தாலும் சமந்தா இன்னும் அந்த வீட்டில்தான் இருந்து வருகிறார். ஐதராபாத்தை விட்டுச் செல்லும் எண்ணமில்லை என்றும் கடந்த வாரம் சமந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஹோட்டல், அப்பா நாகார்ஜுனா வீடு என மாறி மாறி இருந்து வந்த நாக சைதன்யா தற்போது ஒரு புதிய அப்பார்ட்மென்ட்டிற்குச் சென்றுள்ளாராம். அதோடு, ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் நடிகை தபுவுக்குச் சொந்தமான வீட்டை வாங்கியுள்ளாராம் நாகசைதன்யா. அந்த வீட்டில் சில பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அந்த வேலைகள் முடிந்ததும் அந்த வீட்டிலேயே குடி புகுவார் எனத் தெரிகிறது.
அப்பா வழியில் நாக சைதன்யாவும் சில வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.