சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

சாஹோ படத்தை அடுத்து ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ் ஆகிய படங்கில் நடித்து வந்த பிரபாஸ், தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து முடித்து விட்டார். தெலுங்கு, ஹிந்தியில் தயாராகியுள்ள இப்படம் வருகிற ஜனவரி14-ந்தேதி திரைக்கு வருகிறது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 23-ந்தேதி பிரபாஸின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினத்தில் ராதே ஷ்யாம் படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து இப்படத்தின் பிரமோசன் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.