2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக கட்சிக்கு நேற்று 50வது பிறந்த நாள். எம்.ஜி.ஆரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவரும், அவருக்கு ஜேடியாக பல படங்களில் நடித்தவருமான லதா நேற்று சத்யா ஸ்டூடியோவில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: 1972ல் இதே சத்யா ஸ்டுடியோவில் தான் எம்.ஜி.ஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கினார். இன்று 49 ஆண்டுகள் நிறைவு பெற்று ஐம்பதாம் ஆண்டு பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைப்பது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் அவர்களோடு நான் நடித்த முதல் படமான நேற்று இன்று நாளை படத்தின் படப்பிடிப்பு இதே சத்யா ஸ்டுடியோவில் தான் நடந்தது. அப்போதுதான் கட்சியை துவங்கினார். அதே சத்யா ஸ்டுடியோவில் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கினார். அ.தி.மு.க வளர்ச்சி நிதிக்காக மதுரை, திருச்சி, கோவை, தேனி, பவானி போன்ற ஊர்களில் எனது கலைநிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த ரூபாய் 35 லட்சத்தை எம்.ஜி.ஆர் அவர்களிடம் வழங்கியபோது ஒரு நடராஜர் சிலையை எனக்கு பரிசாக வழங்கியது இன்றும் என்னால் மறக்க முடியாதது.
அவர் ஆரம்பித்த கட்சி இன்னும் எவ்வளவு புயல்கள் வந்தாலும் தாங்கி நிற்கும், நிற்க வேண்டும் என்பதே எனது ஆசை. உலகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இன்று என் மேல் அன்பு வைத்து நட்புடன் இருக்கிறார்கள், அதற்கு காரணம் நான் அவருக்கு ஜோடியாக நடித்ததால் மட்டுமல்ல கழகத்தின் மூத்த மூன்றாவது பெண் உறுப்பினர் என்பதாலும் தான். என்றார்.