2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் அவரது காதல் கணவர் நாகசைதன்யாவும் சமீபத்தில் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். ஆனால், அவர்களிடம் இருந்து அறிவிப்பு வெளியான பின்னரும் கூட, அவர்களது பிரிவு எதனால், இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பல யூடியூப் சேனல்களில் தங்களுக்கு தோன்றியபடி செய்திகளை வெளியிட்டு வந்தார்கள்.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி நீதிமன்றத்தில் இரண்டு டிவி சேனல்கள் மற்றும் 3 யூடியூப் சேனல்கள் மீது நீதிமன்றத்தில் அவதூறு புகார் அளித்தார் சமந்தா. இதனை அவசர வழக்காக கருதி முன்னுரிமை தந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் சமந்தாவின் வழக்கறிஞர்..
அதற்கு நீதிபதி, “அவதூறு வழக்கு தொடர்வதற்கு பதிலாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தையை கேட்க செய்திருக்க முடிந்திருக்குமே” என கூறியுள்ளார். மேலும் பிரபலங்கள் தங்களை குறித்த பெர்சனல் தகவல்களை எல்லாம் பொதுவெளியில் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களே அவதூறு வழக்கும் தொடர்கிறார்கள்.. நீதிமன்றம் என்பது எலோருக்கும் சமமான ஒன்று. அதனால் சமந்தாவின் வழக்கும் வரிசைப்படி முன்னுரிமை கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.