துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே அண்ணாத்த படத்தில் 3 பாடல்களின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்ட நிலையில் நேற்று 4வது பாடல் வெளியிடப்பட்டது.
இமான் இசையில் அருண் பாரதி எழுதிய 'வா சாமி' என்ற பாடலை முகேஷ் முஹம்மது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலும் அண்ணாத்த ரஜினியை புகழும் பாடலாக அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4ம் தேதி அன்று தியேட்டர்களில் படம் வெளியாகிறது.