துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
8 தோட்டாக்கள், ஜீவி படத்தில் நடித்த வெற்றி நடிக்கும் புதிய படத்திற்கு பம்பர் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் தற்போது லாட்டரி இல்லாததால் கேரள லாட்டரியை அடிப்படையாகக் கொண்ட படமாக இது உருவாகிறது. சு. தியாகராஜா தயாரிக்கிறார்.
இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வகுமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் செல்வகுமார் கூறியதாவது: கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பெரடியும் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தை தூத்துக்குடி மற்றும் கேரளாவில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. என்றார்.