'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

தமிழில் நடிகை சன்னி லியோன் நடிப்பில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துள்ளது. சன்னி லியோன் நடித்த முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் யுவன் கூறியதாவது: இப்படம் முழுக்க, முழுக்க ஒரு கமர்ஷியல், பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். இப்படம் வரலாற்று பின்னணி கதைகளத்தை கொண்டது. முதல் முறையாக வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடியை செய்துள்ளோம். சன்னி லியோன் பாத்திரம் படத்தின் மிக முக்கியமான முதன்மை பாத்திரமாக ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும். என்றார்.