இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, கடந்த சில வாரங்களாகவே அவரது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக செய்திகளில் அடிக்கடி அடிபட்டு வந்தார். கணவர் நாக சைதன்யாவுடனான பிரிவுக்குப் பின் முதல் முறையாக, தனது தோழியுடன் 'சர் தம் யாத்ரா' சென்றார். அந்த சுற்றுப் பயணம் முடிந்து ஐதராபாத் திரும்பிய சமந்தா அடுத்து ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாதனா சிங் ஆகியோருடன் விமான நிலைய காத்திருப்பு அறையிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, 'வெளிநாடு செல்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா அவருடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருடன் பழகிய காரணத்தால் தான் நாக சைதன்யா அவரை விட்டுப் பிரிந்ததாக சில தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.