2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று நயன்தாராவே ஒரு டிவி பேட்டியில் தெரிவித்தார். இதனிடையே, ஹிந்தியில் ஷாரூக்கானுடன் நயன்தாரா நடிக்கவிருந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
போதைக் பொருள் வழக்கில் ஷாரூக்கான் மகன் சிக்கி சிறையில் இருப்பதால் அவர் தன்னுடைய ஹிந்திப் பட படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். அட்லீ இயக்கி வரும் அந்தப் படம் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு தள்ளிப் போவதால் ஏற்கெனவே மற்ற படங்களுக்காகக் கொடுத்த தேதிகளுக்கு சிக்கல் வரும் என்பதால் அப்படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறார் என்கிறார்கள்.
இருந்தாலும் இந்த வருடத்தில் நயன்தாரா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காகத்தான் சமீபத்தில் கோவில்களுக்குச் சென்று வந்தார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. திருமணத் திட்டம் காரணமாகவும் ஷாரூக்கான் படத்திலிருந்து விலகக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி நயன்தாராவிடமிருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே இது உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும்.