மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2018ல் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தவர் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வந்தார். கடந்த சில மாதங்களாகவே சமந்தாவின் விவாகரத்து செய்தி பரவிய நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் தற்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யா உடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.
நாகசைதன்யா உடனான தனது செல்லப் பிராணி இருக்கும் புகைப்படம் உள்ளிட்ட சில படங்களை மட்டும் சமந்தா நீக்கவில்லை. அது செல்லப்பிராணிகள் தினத்தன்று வெளியிட்ட புகைப்படம். இதன்மூலம் சமந்தா நாகசைதன்யாவை தன் வாழ்வில் இருந்து முழுமையாக நீக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.