'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியாமணி, 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' படத்தில் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்துக்கு பிறகும் நடித்துவரும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து இன்ஸ்டாகிரமில் கூறியுள்ளார். ‛வாழ்க்கை மிகவும் சிறியது. சிரியுங்கள். புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளுங்கள். பிறர் செய்யும் தவறுகளை மன்னித்துவிடுங்கள். சந்தோஷமாக இருங்கள்' என்றுக் கூறி தனது புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார்.