தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகி உள்ள படம் மரைக்கார்; அரபிக்கடலிண்டே சிம்ஹம். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக தயாராகி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது அங்கே அருகில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வந்தார் அஜித், அப்போது அஜித் மரைக்கார் பட செட்டுக்கு திடீர் விசிட் அடித்தார் என செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் மரைக்கார் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், அஜித் தங்களது செட்டுக்கு விசிட் அடித்ததையும், மோகன்லால், பிரியதர்ஷன் உள்ளிட்ட படக்குழுவினருடன் அவர் கலந்துரையாடியதையும் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். அஜித் எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து எங்களுக்கு பெருமை சேர்த்து விட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆண்டனி பெரும்பாவூர். இந்த சந்திப்பு இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.