தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, சூரி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இமான் இசையமைத்து இருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் வசூல் சிறப்பாக இருந்தது.
இந்நிலையில் அண்ணாத்த படம் அனுபவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஹூட் செயலியில் பேசி உள்ளார். அதில், ‛‛ ‛பேட்ட, விஸ்வாசம்' படம் ஒரே நேரத்தில் வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. எனக்கு விஸ்வாசம் படத்தை பார்க்க ஆவலானது. பாதி படம் முடியும் போது படத்தில் அப்படி என்ன இருக்கிறது என யோசித்தேன். ஆனால் அதன் பின் படம் போகப்போக, படத்தின் நிறமே மாறிவிட்டது. க்ளைமாக்ஸ் பிரமாதம், என்னை அறியாமல் கைதட்டி விட்டேன்.
அதன் பின், இயக்குனர் சிவாவை சந்திக்க வேண்டும் என எண்ணினேன். என் வீட்டுக்கே அவர் வந்தார்; வாழ்த்தினேன். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது. குழந்தை மாதிரி இருந்தார்.அவரிடம், ‛எனக்காக கதை இருக்கா?' என கேட்டேன். ‛ஹிட் தர வேண்டும்' என்றேன். அது சுலபம் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கதைக்கு 15 நாள் அவகாசம் கேட்டார். 12 நாளில் வந்து கதை சொன்னார். கதையை சொல்ல சொல்ல கிளைமாக்ஸில் என்னையும் அறியாமல் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. அப்படியே படமாக்குங்கள் என்றேன். அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று சிவா சொல்லி அடித்துள்ளார். ண்ணாத்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சிவாவுக்கு நன்றி. அண்ணாத்த என் வாழ்வில் மறக்க முடியாத முடியாத படம்'' என்றார்.