தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் மஹத் ராகவேந்திரா, நடிகை ஸ்வாதி நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "2030". தற்போதைய நோய் தோற்று பொதுமுடக்கத்தையும் அதன் பின்னணியில் கார்ப்பரேட் மருத்துவதுறையின் சதிகளையும் வெளிப்படுத்தும் கருவை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. ஆன்-ஸ்கை டெக்னாலஜி நிறுவனம் சார்பில் முத்து சம்பந்தம் தயாரித்துள்ளார். 2020ல் துவங்கி 2030ல் கதை முடிவடையும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை தரும் என்கின்றனர் படக்குழுவினர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. தமிழுக்கு முற்றிலும் புதிதான ப்ளாஷ் பார்வேர்ட் முறையில், கதை சொல்லும் வகையில் அதிலும் டைம் டிராவல் சம்பந்தப்படாமல் இந்த வகையில் கதை சொல்லும் முதல் படைப்பாக இருக்கும் என்கிறார்கள்.