மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி |
2020ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் தாக்கத்தால் தியேட்டர்கள் 8 மாதங்கள் மூடப்பட்டன. அதனால், புதிய படங்களின் வெளியீடு குறைந்தது. அதுபோலவே இந்த 2021ம் ஆண்டிலும் கொரானோ இரண்டாவது அலையின் காரணமாக சுமார் 5 மாதங்கள் தியேட்டர்களை மூடியதால் புதிய படங்களின் வெளியீடு குறைந்தது.
2019க்கு சில வருடங்கள் முன்னதாக ஆண்டுக்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்தது. கடந்த வருடம் தியேட்டர்களில் 80க்கும் கூடுதலான படங்களும் ஓடிடி தளங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களுமாக மொத்தமாக 100 முதல் 110 படங்கள் வரையே வெளியாகின.
இந்த ஆண்டு ஓடிடி தளங்களில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கையே 40ஐ நெருங்கிவிட்டது. தியேட்டர்களில் 100ஐக் கடந்துள்ளது. இந்த வாரமும் அடுத்த வாரமும் சில படங்கள் தியேட்டர்கள், ஓடிடி என வெளியாக உள்ளன. இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதமான அடுத்த மாதத்தில் எப்படியும் 30க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
தியேட்டர்கள், ஓடிடி வெளியீடுகள் இரண்டையும் சேர்த்தால் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.