நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி |
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் 34 ஆண்டுகளுக்குபின் புத்தம்புது பொலிவுடன், டிஜிட்டலில் ஆகஸ்ட் 22ல் ரீ ரிலீஸ் ஆகிறது. சென்னையில் நடந்த இந்த பட விழாவில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு தந்தை குறித்து பேசும்போது அழுதார்.
''அப்பா பல படப்பிடிப்பு சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். கேப்டன் பிரபாகரன் குறித்து நிறைய பேசியிருக்கிறார். அவர் இல்லாவிட்டாலும், அவர் நம்முடன்தான் இருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள வாக்கு கொடுத்தேன். பல தடைகள் வந்தாலும் அப்பா மாதிரி சொன்னபடி செல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்தேன் '' என்று அழுதார்.
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கேப்டன் பிரபாகரன் குறித்து நிறைய பேசினார். ''இந்த படத்தை 94வது படமாக தொடங்கினோம். ஆனால், படப்பிடிப்பு தாமதம் ஆனது. இதில் நடித்த சரத்குமாருக்கு அடிபட்டது. அவரை வைத்து சில காட்சிகள் எடுத்த நிலையில், வேறு நடிகரை மாற்றலாமா என யோசித்தபோது, சரத்குமார் வரும் வரை காத்திருப்போம். அவரை ஏமாற்றக்கூடாது என்று விஜயகாந்த் கூறினார்.
முதலில் சரண்யா பொன்வண்ணன் தான் ரம்யாகிருஷ்ணன் ரோலில் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. உடை உட்பட பல விஷயத்தில் அவருடன் கருத்து வேறுபாடு. தவிர, அவரின் உடல்நிலை காரணமாகவும் படத்தில் இருந்து விலக, யாரை ஒப்பந்தம் செய்யலாம் என யோசித்தோம். ரம்யா கிருஷ்ணன் பெயரை சிலர் சொன்னார்கள். அவரோ தமிழில் தோல்வி படம் கொடுத்துவிட்டு, தெலுங்கில் நடித்து வந்தார். அவரை எதிர்ப்புகளை மீறி நடிக்க வைத்தோம். ஆட்டமா தேரோட்டமா பாடலும், அவர் சீன்களும் இன்றும் பேசப்படுகிறது.
அதேபோல், நடிகர் கரிகாலனை தான் வீரபத்திரன் கேரக்டரில் முதலில் நடிக்க வைத்தோம். மன்சூர் அலிகான் சாய்சில் இருந்தார். படப்பிடிப்பில் ஒருநாள் நான் யார் தெரியுமா வீரபத்திரன் என்று சொல்லி, படக்குழு உறுப்பினரை அடித்துவிட்டார் மன்சூர் அலிகான். அந்த கேரக்டராகவே மாறியிருந்தார். உடனே அவரை பிக்ஸ் செய்தோம். படப்பிடிப்பு சமயத்தில் பல விபத்து, விஜயகாந்த் அவ்வளவு ரத்தம் சிந்தினார். இந்த படப்பிடிப்பு கிளைமாக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது விஜய பிரபாகரன் பிறந்தார். படத்தின் பெயர் அவருக்கு வந்தது. 34 ஆண்டுகள் கழித்து இந்த விழாவுக்கு அவரே சிறப்பு விருந்தினர்'' என்றார்.