பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
''கணவன் - மனைவி இடையிலான குடும்பக் கதை, டைப் லுாப் உளவியல் சார்ந்து, வேற்று கிரக கலன் வருகை, அறிவியல் கற்பனை கலந்த வித்தியாசமான 'த்ரில்லர் மூவி','' என்கிறார் 'ஜாங்கோ' படத்தின் ஹீரோ சதீஷ்குமார்.
அட்டகத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை, மாயவன் போன்ற வித்தியாசமான படங்களை தயாரிக்கும் சி.வி.குமார், ஜென் ஸ்டுடியோஸ் சுரேந்திரன் ரவியுடன் இணைந்து, திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் 'ஜாங்கோ'. இப்படத்தை புதுமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முதல் 'டைம் லுாப்' கதை என்ற பெருமையுடன், இந்த படம் திரையரங்குகளை கலக்கி வருகிறது.
கோவை, ஒண்டிப்புதுார், நடுப்பாளையத்தை சேர்ந்த புதுமுக நடிகர் சதீஷ்குமார், 'டிக்டாக்' புகழ் மிருணாளினி ரவி ஆகியோர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அனிதா சம்பத், ஹரீஷ் பொரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஹீரோ சதீஷ்குமார் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி!
முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்த அனுபவம் பற்றி?
கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏதாவது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்கிற ஆசை. இதற்காக பல புரொடியூசர், இயக்குனரிடம் எனது புகைப்படங்களை கொடுத்து படத்திற்காக காத்திருந்தேன். 'ஜாங்கோ' படத்திற்கு ஒரு புதுமுக நபர் தேவை என்பதால், என்னை தேர்வு செய்தனர். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. பின்னர், கதைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டேன்.
நடிப்பிற்கு முன் ஏதாவது பயிற்சி மேற்கொண்டீர்களா?
கண்டிப்பாக. டாக்டராக நடிக்க வேண்டும் என்பதால் கோவையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் முறையை நேரடியாக பார்த்து சில தகவல்களை கற்று கொண்டேன். பின்னர், மருத்துவர்களின் அணுகுமுறை, பழக்க வழக்கங்களை கேட்டறிந்தேன்.
'டைம் லுாப்' என்றால் என்ன... தெளிவாக கூறுங்களேன்...?
ஒரே நாளின் நிகழ்வுகள் மறுபடி, மறுபடி நிகழ்வது. தமிழில் இது தான் முதல் படம். டைம் லுாப் மையப்படுத்தியே படம் நகர்கிறது. படம் முழுவதும் விறுவிறுப்பு மற்றும் அடுத்தது என்ன நடக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு நிறைந்திருக்கும்.
இந்த படத்தில் மக்களுக்கு ஏதாவது 'மெசேஜ்' உள்ளதா?
கணவன்- மனைவி இடையிலான குடும்பக் கதை, டைப் லுாப் உளவியல் சார்ந்து, வேற்று கிரக கலன் வருகை, அறிவியல் கற்பனை கலந்த வித்தியாசமான 'த்ரில்லர் மூவி'.