இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி |
வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேய மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'நாங்க வேற மாரி' பாடல் ஆகஸ்ட் மாதம் யூ டியூபில் வெளியிடப்பட்டது. 35 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றை செப்டம்பர் மாதம் வெளியிட்டார்கள். அந்த வீடியோவிற்கு 11 மில்லியன் பார்வைகள் கிடைத்தன.
2022 பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அடுத்து படத்தின் டீசர், டிரைலர், அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தீபாவளிக்கே ஏதாவது வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், வரும் வியாழனன்று படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. தாமரை எழுத, சித் ஸ்ரீராம் அந்தப் பாடலைப் பாடியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
'மாநாடு' படத்திற்குப் பிறகு யுவனின் இசை மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'வலிமை'.