மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் மாநாடு. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பட வெளியீட்டின் போது சில பிரச்னைகளும் நடந்தது. ஆனபோதிலும் அதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வை எட்டியுள்ளது. மாநாடு படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை படக்குழு கொண்டாடி வருகின்றனர். ரஜினி, சிவகார்த்திகேயன் என பல திரைநட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதில் மாநாடு படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி . மாநாடு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது குற்றச்செயல், அனைவரும் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கட்டும் என தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.