கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை இரண்டு முறை போட்டுக் கொண்ட போதிலும் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். அதனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் -5 நிகழ்ச்சியை அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் நடத்தி வருகிறார் .
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி , பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் . இதில் கமலுடன் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு சண்டைக் காட்சியை பொள்ளாச்சியில் பிரமாண்டமான அரங்கு அமைத்து படமாக்க திட்டமிட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்த அரங்கம் அமைக்கும் வேலைகளும் நடை பெற்று வந்தது. ஆனால் தற்போது எதிர்பாராத விதமாக கமலுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அந்த அரங்கத்தை சென்னையில் உள்ள பின்னி மில்லில் அமைக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் லோகேஷ். அதனால் விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி மோதும் சண்டைக் காட்சி பொள்ளாச்சிக்கு பதிலாக சென்னையில் படமாக்க உள்ளனர்.