டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனரான நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமாகி கடந்த இரண்டு வருடங்களாக உருவாகி வரும் படம் 'புராஜக்ட் கே'. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், திடீரென கடந்த ஓரிரு வாரங்களாக இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. அதை நிரூபிக்கும் விதத்தில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது என சொல்லப்பட்டது. தற்போது கமல்ஹாசன் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் பட்ஜெட் மேலும் அதிகரிக்கும் என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். சுமார் 20 நாட்கள் மட்டுமே கமல்ஹாசன் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். அதற்காக அவருக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். கமல்ஹாசன் படத்தில் இணைந்தது குறித்து படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபாஸ் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
பிரபாஸ், அமிதாப், கமல், தீபிகா என இந்திய அளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் அடுத்த வருடத்தின் மிகப் பிரம்மாண்டமான படமாக இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 2024ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளியாகிறது.