டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து 2016ல் வெளிவந்த படம் 'தர்மதுரை'. இப்படத்தில் இடம் பெற்ற 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து' பாடல் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.
யுவன் இசையில் வெளிவந்த 'மாரி 2' படப்பாடலான 'ரவுடி பேபி' பாடல்தான் யு டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள தமிழ் சினிமாப் பாடலாக உள்ளது. அந்தப் பாடல் 147 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் பட்டியலில் யுவன் இசையில் வந்த பாடல்களில் 'ரவுடி பேபி' பாடல், 'என்ஜிகே' படத்தில் இடம் பெற்ற ' அன்பே பேரன்பே' பாடல், 'டிக்கிலோனா' படத்தில் இடம் பெற்ற 'பேரு வச்சாலும்' பாடல், ஆகிய மூன்று பாடல்கள் 100 மில்லியன் கிளப்பில் உள்ளன. இப்போது நான்காவது பாடலாக 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து' பாடல் சேர்ந்துள்ளது.
யு டியூபில் பாடல் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 100 மில்லியன் கிடைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.