துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நுழைந்து பிசியாக நடித்து வரும் சில நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தனது உடற்பயிற்சி, சுற்றுலா, படப்பிடிப்பு உள்ளிட்ட தன்னை பற்றிய பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். படங்களில் நடிக்கும் நேரங்கள் தவிர்த்து மீதி நேரங்களில் புத்தகம் படிப்பதற்கு செலவிடும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் சல்லி ரூனே என்கிற எழுத்தாளர் எழுதிய நார்மல் பீப்பிள் என்கிற நாவலை வாசித்துள்ளார்.
அந்த நாவல் குறித்து அவர் கூறும்போது, “ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது இந்தப்புத்தகம் உங்கள் இதயத்தை உடைத்து விடும். குறைபாடுள்ள கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான எதிர்மறை கதாபாத்திரங்கள்.. வாவ்” என கூறியுள்ளார். ஆனால் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் சோகமாகி விட்டார் பூஜா ஹெக்டே. புத்தகத்தை கையில் வைத்தபடி சோகமாக படுத்திருக்கும் தனது புகைப்படத்தையும் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.