சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார் சோழநாட்டு இளவரசி கதையின் நாயகி குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இது மிகவும் தைரியமான கதாபாத்திரம். வாள் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. இதற்காக த்ரிஷா பண்டையகால தமிழை அவரே கற்று சொந்தக் குரலில் டப்பிங் செய்துள்ளராம். மேலும் இந்தப் படத்திற்காக குதிரைப் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்தவர்கள் த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் அவரது கேரியரில் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.