ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகிணி மற்றும் பலர் நடிக்கும் படம் 'ராக்கி'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படம் டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஸ்வரன் அடுத்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சாணி காயிதம்' படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். 'தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படமான 'ராக்கி' வெளிவருகிறது.
'ராக்கி' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இப்படத்தின் டீசர் இந்த வருடத் துவக்கத்தில் வெளியான போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருட்டில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் படத்தின் நாயகன் வசந்த்ரவி கரகர என அறுக்கும் காட்சிதான் டீசரில் இடம் பெற்றது.