ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

'அசுரன்' படத்திற்குப் பிறகு தனுஷ், ஜிவி பிரகாஷ்குமார் மீண்டும் இணைந்துள்ள படம் 'மாறன்'. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனாலும், படம் எப்போது வெளிவரும் என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை. இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூட தகவல் வெளிவந்தது.
இப்படம் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் ஜிவி பிரகாஷ் கொடுத்திருந்தார். “மாறன்' இசை வேலைகள் கடைசி கட்டத்தில் உள்ளன. படத்தில் நான்கு பாடல்கள், 'மாறன்' தீம் மியூசிக்கும் உண்டு. இசை விரைவில் வெளியாகும்,” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன்பிறகும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இன்று மீண்டும் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் ஜிவி. அதில், “மாறன்' பின்னணி இசை இன்று ஆரம்பம். ஆக்ஷன் நிறைந்த பின்னணி இசையாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், விரைவில் பட வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.