படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஒரு சில படங்களில் நடித்திருந்த யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை ரிசார்ட் ஒன்றி்ல் நடந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் திரும்பினார். காரை அவரே ஓட்டி உள்ளார். கார் சாலை தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி மரணம் அடைந்தார். யாஷிகா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் வெளி உலகிற்கு வர தொடங்கி உள்ளார். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று அதனை யாஷிகா பார்வையிட்டார். அங்கு தன்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கண்ணீ்ர்மல்க நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த இடத்தில்தான் என் தோழியை இழந்தேன். அதனால் இந்த பகுதியை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்த பகுதி மக்கள் என்னை காரில் இருந்து வெளியே இழுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது இப்போதும் நினைவிருக்கிறது. என் தோழியையும் அவர்கள் காப்பாற்றி இருந்தால் இன்னும் வேற மாதிரி இருந்திருக்கும். அவர்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன். இது போன்ற நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.