போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கு 'ராஞ்சனா, ஷமிதாப்' ஆகிய படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'அத்ராங்கி ரே' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
'ராஞ்சனா' படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அத்ராங்கி ரே' படத்தில் அக்ஷய்குமார், தனுஷ், சாரா அலிகான் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை மும்பையில் நடந்து வருகிறது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பங்கேற்று வருகிறார்கள்.
இதனிடையே, அக்ஷய்குமார் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷுடன் எடுத்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “இன்று என்னுடைய 'அத்ராங்கி ரே' படத்தில் உடன் நடித்த தனுஷ் வந்து, “சார், நான் உங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார். அதற்கு நான், “நான் உங்களது அற்புதமான திறமையைப் பார்க்கிறேன்,” என்றேன். பின் இருவரும் பார்த்துக் கொண்டோம், அதனால் இது நிகழ்ந்தது,” என அந்த செல்பிக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
'அத்ராங்கி ரே' படம் டிசம்பர் 24ம் தேதியன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழில், 'கலாட்டா கல்யாணம்' என்ற பெயரில் வெளியாக உள்ளது.