துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் லைகர். இதில் அவர் குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். அவரது குருவாக உலக புகழ்பெற்ற குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன் நடித்திருக்கிறார். அனன்யா பாண்டே ஹீரோயின். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். கரண் ஜோஹர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி இணைந்து தயாரிக்கிறார்கள். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
மைக் டைசன் தொடர்பான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கிவிட்டு திரும்பிய படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இம்மாதம் டிச., 31ல் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகிறது.