சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் ராஷி கண்ணா. அதன்பிறகு அடங்கமறு, அயோக்கியா, சங்க தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 என பல படங்களில் நடித்தார். தற்போது தனுசுடன் திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வரும் ராஷி கண்ணா, தற்போது யோதா என்ற ஹிந்தி படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். கரன் ஜோகர் தயாரிக்கும் இந்த படத்தில் திஷா பதானி இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
இதுகுறித்து ராசி கண்ணா வெளியிட்டுள்ள செய்தியில், யோதா அணியில் சேரப் போகிறேன் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக உள்ளோம். 2022 நவம்பர் 11ம் தேதியன்று திரையரங்குகளில் சந்திப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராஷி கண்ணா 2009ம் ஆண்டு மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி படத்தில் தான் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று நடிக்க தொடங்கிவிட்டவர். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.