மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா |
தமிழ், ஹிந்தி என பிஸியாக இருந்து வந்த தனுஷ் அடுத்து தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கெனவே தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அப்படம் அடுத்த வருடம் ஆரம்பமாக உள்ளது.
அடுத்து மற்றொரு தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்க உள்ள படத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராக உள்ளது. வெங்கி அட்லுரி இதற்கு முன்பு, “தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங்க தே' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் மனைவி சாய் செஜன்யா மற்றும் நாக வம்சி இணைந்து தயாரிக்கிறார்கள்.
வெங்கி, தனுஷ் இணையும் படத்திற்கு தமிழில் ‛வாத்தி' என பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் ‛சார்' என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தைத்தான் தன்னடைய முதல் நேரடி தெலுங்குப் படம் எனக் குறிப்பிட்டுள்ளார் தனுஷ். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் நடிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சம்யுக்தா மேனன் ஏற்கெனவே தமிழில் 'களரி, ஜுலை காற்றில்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் 'பீம்லா நாயக்' படத்தில் நடித்து வருகிறார்.