இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஆர்ஆர்ஆர்'. இப்படம் ஜன.,7ல் இந்தியா முழுக்க 5 மொழிகளில் வெளியாகிறது. நேற்று படத்தின் பிரஸ் மீட் நிகழ்வு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது : ‛‛இந்தியா என்ற நாடு, நிறைய ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கி உள்ளோம். அதை படத்திலும் கொண்டு வந்துள்ளனர். நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன். இந்த படம் முந்தைய படங்களின் அத்தனை சாதனைகளையும் முறியடிக்கணும். இந்த படம் ஒரு துறையை, ஒரு மொழி படம் என்று எண்ண கூடாது. இந்த மொத்த படக்குழுவும் ஒட்டு மொத்த இந்தியாவாக கொண்டு வந்துள்ளனர். ஆகவே இதை வடக்கு, தெற்கு என பிரிக்காமல் ஒட்டு மொத்த இந்திய படம் என்று பார்க்கணும். எவ்வளவு நாள் தான் ஹாலிவுட் படங்களை உதாரணம் காட்டி நாம் பேசுவது, நம்ம படத்தை பார்த்தீங்களா என நாம் கேட்க வேண்டாமா. இந்த பட அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்திய சினிமாவின் பெருமை என்று தான் பார்க்கிறேன். இப்படி ஒரு படத்தை கொடுத்த ஒட்டுமொத்த ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்கும் நன்றி. 2022ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஆர்ஆர்ஆர் படம் மட்டுமின்றி அஜித்குமாரின் வலிமை படமும் வெளியாகிறது. அதனால் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். இந்த படங்களுக்கு வரும் கூட்டத்தை போன்று எனது படத்திற்கும் ஒரு நம்பிக்கை கிடைக்கும்'' என்றார் சிவகார்த்திகேயன்.