மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் கைதி. ஒரு இரவில் நடக்கும் கதையில் உருவான இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன் , அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், பெஞ்சமின் உள்பட பலர் நடித்தார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது. சூப்பர் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை முடித்ததும் கைதி 2 படத்தை தொடங்க இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. கமலின் விக்ரம் படத்தை முடித்ததும் விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் விஜய் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடிக்க இருப்பதால் அந்த படத்தை அவர் முடித்து வருவதற்குள் கார்த்தியை வைத்து கத்தி-2 படத்தை எடுத்து முடித்து விட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.