தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் |
ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படம் ஜனவரி 14ம் தேதி, தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று கூட இப்படத்தின் வெளியீடு பற்றிய தகவல்களுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்தாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் படத்தைத் தள்ளி வைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதுள்ள கொரானோ சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்கிறோம். ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. கடந்த சில நாட்களாக எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால், பெரிய திரைகளில் படத்தை வெளியிட காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.ராதேஷ்யாம் படத்தின் கதை, காதலும், விதியும் சம்பந்தப்பட்டது. உங்கள் அன்பு இந்த கடின சூழலை மாற்றும் என நாங்கள் நம்புகிறோம். தியேட்டர்களில் உங்களை விரைவாக சந்திக்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அடுத்து யார் தள்ளிவைப்பு அறிவிப்பை வெளியிடப் போகிறார்கள் ?. காத்திருக்கிறது தமிழ் சினிமா திரையுலகம்.