'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
1997ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பார்த்திபன், மீனா மற்றும் பலர் நடித்த 'பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். தனது அறிமுகப்படத்திலேயே அழுத்தமான தடத்தைப் பதிவு செய்த சேரன் தொடர்ந்து சமூக அக்கறையுள்ள பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தார்.
“பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம்” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு படமும் உணர்வுபூர்வமாக உறவுகளின் முக்கியத்துவத்தை விளக்கிய படங்களாக அமைந்தது.
'வெற்றிக்கொடி கட்டு' படத்திற்காக சிறந்த சமூகப் பிரச்னைகளைப் பற்றி சொன்ன படம் என 2000ம் ஆண்டிலும், 'ஆட்டோகிராப்' படத்திற்காகவும், அனைத்துவிதமான என்டர்டெயின்மென்ட்டைக் கொடுத்ததற்காக 2004ம் ஆண்டிலும், 'தவமாய் தவமிருந்து' படத்திற்காக குடும்ப நலன் பற்றி சிறப்பாகச் சொன்னதற்காக 2005ம் ஆண்டிலும் தேசிய விருதுகளைப் பெற்ற படங்களைக் கொடுத்த இயக்குனர் சேரன் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'சொல்ல மறந்த கதை' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர். தற்போது மீண்டும் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சேரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி நேற்று 25 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவருக்கு பல சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், ரசிகைகள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தனது நன்றியைப் பகிர்ந்து வருகிறார் சேரன்.