பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு முன்னே நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். ஆனால், அவருக்கு அந்த காலக்கட்டத்தில் நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதே போல், திரைபிரபலமாக இருந்தாலும், திரைக்கு வெளியே அவர் செய்த சர்ச்சைகளால் தான் அவர் மிகவும் பிரபலமானார் என்பது வேறு கதை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது கேரியரில் டர்னிங் பாய்ண்டை அடைந்துள்ள வனிதா விஜயகுமார், நடிப்பு, பிசினஸ் என பொறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்த படம் ஒன்றின் புரோமோஷனில் பேசிய அவர், சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன் என பேட்டியளித்துள்ளார்.
தில்லு இருந்தா போராடு என்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வனிதா, அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, 'சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தைக் கோட்டைவிட்டு விட்டேன். முட்டாள்தனம் செய்துவிட்டேன். வில்லியாக தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன். இனி காமெடியோ, வில்லியோ, குணச்சித்திரமோ சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் ஒரு கை பார்ப்பதாக முடிவு செய்துவிட்டேன்' என கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமார் சமிபத்தில் ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.