சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் பிப்ரவரி 14ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை சம்பந்தப்பட்ட பட நிறுவனம் வெளியிடவில்லை. என்றாலும் பிரபாஸின் ரசிகர்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்டிப்பாக தியேட்டரில்தான் வெளியிட வேண்டும். திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே படம் திருப்திகரமாக இருக்கும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இதனிடையே ராதே ஷ்யாம் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் அவ்வளவு தொகை கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வராது. ஆகவே படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்கிறார்கள்.