தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'ரீமேக்' சினிமாவில் அதிகம் கேள்விப்படும் ஒரு வார்த்தை. ஒரு மொழியில் வெற்றி பெற்ற அல்லது வரவேற்பைப் பெற்ற படங்கள் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது கருப்பு--வெள்ளை காலத்திலிருந்தே காலம் காலமாக இருந்து வருகிறது.
ஹிந்தியிலிருந்துதான் ஒரு காலத்தில் அதிகப் படங்கள் தென்னிந்திய மொழிகளில் ரீமேக்காகி இருக்கிறது. இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. தென்னிந்திய மொழிகளிலிருந்து ஹிந்திக்கு அதிகப் படங்கள் ரீமேக் ஆகி வருகிறது.
அந்த விதத்தில் தமிழிலிருந்து “அந்நியன், மாஸ்டர், கைதி, சூரரைப் போற்று, விக்ரம் வேதா, தடம், கோமாளி, அருவி, மாநாடு, துருவங்கள் 16, ராட்சசன், ஜிகர்தண்டா” ஆகிய படங்களும், தெலுங்கிலிருந்து “ஹிட், ஜெர்ஸி, அலா வைகுந்தபுரம்லோ, சத்ரபதி, நாந்தி” ஆகிய படங்களும், மலையாளத்திலிருந்து “டிரைவிங் லைசன்ஸ், த்ரிஷ்யம் 2, ஹெலன், அய்யப்பனும் கோஷியும், நாயாட்டு”, கன்னடத்திலிருந்து 'யு டர்ன்' ஆகிய படங்களம் தற்போது ரீமேக் ஆகி வருகிறது.
அடுத்தடுத்து இத்தனை படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய மொழிகளில் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்கள் அதிகம் வருகிறது என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.