10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

கொரோனா மூன்றாவது அலை பரவல் சற்றே கட்டுப்பட்டது போல தோன்றினாலும் அதன் பாதிப்பு தொடரவே செய்கிறது. குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்களை, அதிலும் உடல் ஆரோக்கியத்தை உடற்பயிற்சி மூலம் பேணி காப்பவர்களையும் கூட கொரோனா பதம் பார்த்து வருகிறது. அந்தவகையில் நடிகர் சரத்குமார் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டார் சரத்குமார். தற்போது தனக்கு கோவிட் பாதிப்பு உள்ளது என்பதை தெரியப்படுத்தியுள்ள சரத்குமார். சமீப நாட்களாக தன்னுடன் சந்திப்பு நிகழ்த்திய அனைவரையும் ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.