படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அந்த படத்தில் கூலி வேலைக்குச் செல்லும் சாதாரண கிராமத்து பெண்ணாக நடித்தவர், அதைத்தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் சமூக சேவகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள கீடம் என்கிற படத்தில் சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட்டாக நடித்துள்ளார் ரஜிஷா விஜயன். ஏற்கனவே கோகோ வீராங்கனையாக ரஜிஷா நடித்த கோக்கோ என்கிற படத்தை இயக்கிய ராகுல் ரிஜி நாயர் என்பவர் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
வழக்கமாக பொதுமக்கள் பலருக்கும் நேர்கின்ற, அதேசமயம் அவர்கள் அதிகம் கண்டுகொள்ளாத ஒரு விஷயத்தில் நிகழும் சைபர் குற்றங்கள் பற்றிய பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. இவற்றை ரஜிஷா விஜயன் தனது திறமையை பயன்படுத்தி எப்படி கையாளுகிறார் என்பதுதான் படத்தின் கதையாம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.