அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? | 5 மொழிகளில் வெளியான ஆனந்தியின் வெப் சீரிஸ் | 'பிளாக் கோல்டில்' நிழல் உலக மாபியாக்களின் கதை | விஜய், அஜித்துக்கு வாழ்த்து, ரஜினிக்கு பாராட்டு : 30 ஆண்டை தொட்ட சிம்ரன் பேட்டி | 3 முதல்வர்கள் திறந்து வைத்த கே.பி.சுந்தராம்பாள் தியேட்டர் இடிப்பு | தனுசுடன் காதலா? : சிரிப்புதான் வருகிறது என்கிறார் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: சபதத்தை நிறைவேற்றிய ராமராஜன் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் படத்தில் நடித்த நம்பியார் | 'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார் ரைசா வில்சன். விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் மற்றும் காதலிக்க யாருமில்லை, பொய்க்கால் குதிரை, ஆலிஸ் என அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய்யை வைத்து சுந்தர். சி இயக்கி வரும் புதிய படத்திலும் ரைசா வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா போன்ற நடிகைகள் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் தற்போது இன்னொரு முக்கிய வேடத்திற்கு ரைசா வில்சன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் ஒரு பாடகி வேடத்தில் நடிக்கிறேன். இதுவரை நான் நடிக்காத வேடம். அதோடு மிகவும் கலகலப்பான வேடம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.