சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? |
பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பால், மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வந்த லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இசையமைப்பாளர் இளையராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
இந்திய திரைப்பட இசை உலக வரலாற்றில் கடந்த 60, 70 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தெய்வீக, காந்தர்வ குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்பது எனக்கு தெரியவில்லை. அவருடைய இழப்பு இசை உலகத்திற்கு மட்டும் அல்ல இந்த உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தன் இரங்கல் செய்தியை கூறியுள்ளார்.