தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஹிந்தி படங்களை அடுத்து தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், மும்பையில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டுள்ளார் . அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவை பார்த்து பலரும் சுதந்திர தினத்தன்று சொல்லக்கூடியதை கிருஷ்ண ஜெயந்தி அன்று சொல்வதா? என்று கருத்து வெளியிட்டு அவரை டிரோல் செய்தனர்.
அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் ஜான்வி கபூர். அதில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பலரும் பாரத் மாதா கி ஜெய் என்று கூறினார்கள். அதைக் கேட்டுதான் நானும் சொன்னேன். ஆனால் நான் சொன்னதை மட்டும் கட் பண்ணி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள். அதோடு, பாரத் மாதா கி ஜெய் என்ற வாசகத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.