'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

பிரித்வி ஆதித்யா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ஆதி, ஆகன்க்ஷா சிங், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கிளாப்'. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆந்திரா, தெலங்கானாவில் மக்கள் ஓரளவிற்கு தியேட்டர்களுக்கு வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் இன்னும் பழையபடி மக்கள் வரவில்லை. 'கிளாப்' படம் இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளிலும் தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயங்கியுள்ளது. நல்ல விலை கிடைத்ததால் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள் எனச் சொல்கிறார்கள்.
ஆதி தெலுங்கில் நடித்து கடைசியாக வெளிவந்த 'குட் லக் சகி' படம் தியேட்டர்களில் வெளியானது. அப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'தி வாரியர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஆதி.