சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

இசையமைப்பாளர் இளையராஜாவின் 1,417வது படமாக உருவாகி வரும் "நினைவெல்லாம் நீயடா" படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித், ஆர்.வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இளையராஜா 5 பாடல்களை உருவாக்கியுள்ளார். பழநிபாரதி ஒரு பாடலும், சினேகன் 3 பாடலையும் எழுத, இளையராஜாவும் ஒரு பாடலை எழுதியுள்ளார். இளையராஜா எழுதிய பாடலை அவரது மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.
இது பற்றி இயக்குனர் ஆதிராஜன் கூறுகையில், ‛இளையராஜா உடன் ஒரு படத்திலாவது பணியாற்றி விடவேண்டும் என்ற என்னுடைய பெருங்கனவு இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பாடல் கம்போஸிங்கின் போது நான் பயந்து கொண்டே இருந்தேன். ஆனால் இளையராஜா உனக்கு என்ன தேவை என்று கேட்டு... தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். இப்படத்திற்கு ஒரு பாடலை நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது, உடனே சம்மதித்து "இதயமே இதயமே இதயமே.... உன்னைத் தேடித் தேடிக் கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே" என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.
இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையைத் தெரிவித்தேன். அவரும் உடனே யுவனை அழைத்துப் பாட வைத்தார். மும்பை பாடகி ஸ்ரீஷா இணைந்து பாடியிருக்கிறார். யுவனின் மயக்கும் குரலில் பாடல் அருமையாக வந்திருக்கிறது. கண்டிப்பாக இந்த பாடல் பல மில்லியன் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடிக்கும் என்பது உறுதி. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது'. இவ்வாறு அவர் கூறினார்.