இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். பலரும் தங்களது தகவல்களை ரசிகர்களுக்கு இவற்றின் மூலம்தான் தெரியப்படுத்துகின்றனர். அதேசமயம் சில விஷமிகள் இது போன்ற நட்சத்திரங்களின் கணக்குகளை ஹேக் செய்து அதில் விஷமத்தனமான செய்திகளை பரப்பி அவர்களை சங்கடத்திலும் சிலநேரம் சிக்கலிலும் சிக்க வைக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் ஒரு வழியாக தான் அதை மீட்டு விட்டதாகவும் அதில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறும் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நடிகை காயத்ரி. இதுகுறித்து காயத்ரி கூறுகையில், துல்கர்சல்மான் போலவே ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த பதிவுக்கு பதிலளித்துள்ள நடிகர் பிரேம்ஜி அவரிடமிருந்து தனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதை கிளிக் செய்தபோது வேறு ஏதோ ஒரு வலைதள பக்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.