புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை |

மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‛ஜோசப்' படம் தமிழில் ‛விசித்திரன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்து தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கி உள்ளார். இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் இந்த படத்தை வெளியிடுகிறார்.
இப்பட விழாவில் பேசிய இயக்குனர் பாலா, ‛‛மலையாளத்தை காட்டிலும் இந்த படம் நன்றாக வந்துள்ளது. ஆர்.கே.சுரேஷிற்கு நல்லதொரு படம். இதை வைத்து அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. இனி ஏனோ தானோ என படங்களை தேர்வு செய்யாதே பெயரை கெடுத்து கொள்ளாதே, உன் மரியாதையை காப்பாத்திக்கோ'' என அட்வைஸ் செய்தார்.