23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் 23ல் தேர்தல் நடந்தது. இதில் நாசர் தலைமையிலான ஒரு அணியும், பாக்யராஜ் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலை சந்தித்தனர். முறையான வாக்காளர் பட்டியலை தயாரிக்காமல் தேர்தலை நடத்தினர். முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனால் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதுதவிர மேலும் சில வழக்குகள் தேர்தல் தொடர்பாக போடப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக விசாரித்த சென்னை ஐகோர்ட், நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடத்தவும், அதுவரை அரசு நியமித்த தனி அதிகாரி சங்கத்தை நிர்வகிப்பார் என உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மீதான வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்பு கூறாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தனர். அதில் 2019ல் நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லும். மறுதேர்தல் நடத்த தேவையில்லை. தேர்தலில் பதிவான ஓட்டுகளை 4 வாரங்களில் எண்ணி முடிவுகளை அறிவிக்கவும் தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.